எமது நோக்கம்

"சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் வகையில் சமூகத்தின் வாழ்க்கை முறைகளுக்கு உதவும் சிறந்த அரசு நிறுவனமாக இருத்தல் "

எமது பணிகள்

"அரசாங்க கொள்கைகளுக்கு இணங்க ஒரு சேவையை வழங்குதல், வளங்களின் சரியான ஒருங்கிணைப்பு மற்றும் மக்களின் பங்கேற்பு ஆகியவற்றைக் கொண்ட திட்டமிட்ட, திறமையான வளர்ச்சி செயல்முறையின் மூலம் சமூகத்தின் வாழ்க்கை முறையை மேம்படுத்துதல்."

கல்முனை வடக்கு  பிரதேச செயலகத்தின் வரலாறு

கிழக்கு மாகாணத்தின் நிர்வாக மாவட்டங்கள், அம்பாறை மாவட்டம் 20 பிரதேச செயலகப் பிரிவுகளைக் கொண்டிருந்தது.இவற்றில் கல்முனை தமிழ் பிரதேச செயலகம்  05 பிரதான கிராமங்களையும் 03 சிறிய கிராமங்களையும் உள்ளடக்கியிருந்தது.நிர்வாகத்தை விரிவுபடுத்துவதற்காக 31 கிராம அலுவலர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு 1989 ஜனவரி 12ஆம் தேதி உருவாக்கப்பட்டது.தற்போது 29 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை உள்ளடக்கி பொதுமக்களுக்கு சேவைகளை வழங்கி வருகின்றது. இந்த பிரதேச செயலகப் பிரிவிற்கு வடக்கில் மட்டக்களப்பு மாவட்டம், கிழக்கு வங்காள விரிகுடா, தெற்கு - கல்முனைக்குடி, மேற்கு - நாவிதன்வெளி பிரதேசங்கள் காணப்படுகின்றன.இதன் எல்லைகள் கல்முனைத் தரவைப் பிள்ளையார் கோவில் முன் வீதியானது சென்னைக்குடியிருப்பு ஊடாக ஆரம்பித்து துறைவந்தியமேடு வரையிலும், கல்முனைத் தரவை பிள்ளையார் கோவில் முன் வீதியிலிருந்து பாண்டிருப்பு ஊடாக பெரியநீலாவணை வரையிலும் ஆகும்.தோராயமாக இதன் நீளம் 66.9கி.மீ2.இப்பிரிவில் 1.2கி.மீ2 பரப்பளவு தண்ணீரால் சூழப்பட்டுள்ளது.சுமார் 35648 மக்கள் தொகை. 99.6% தமிழ் பேசும் மக்கள் வாழ்கின்றனர்.பெரும்பாலான மக்கள் நெற்செய்கை, நன்னீர் மீன்பிடித்தல், கடல் மீன்பிடித்தல், பயிர் செய்கை, வியாபாரம் மற்றும் சிறு கைத்தொழில்களை செய்கிறார்கள். இவற்றின் மூலம் வருமானம் பெற்று எமது பிரதேச செயலகத்தின் ஊடாக சேவைகளை பெற்று வருகின்றனர்.
 

Role performed at DS

பெயர் இருந்து வரை
திரு.அழகரெட்ணம் 1989 1991
திரு.எஸ்.அருள்ராசா 1991 1994
திரு.ராஜசெல்வகுமாரன் 1994 1995
திரு.அமலநாதன் 1995 1996
திரு.தவராஜா 1996 1999
திரு.அழகரெட்ணம் 1999 2004
திரு.வி.வாசுதேவன் 2004 2007
திருமதி.டி.பிரசாந்த் 2007 2009
திரு.ஜெகராஜன் 2009 03 months
திரு.கே.லவநாதன் 2009.09.02 2018.08.14
திரு.எஸ்.ஜெயரூபன் 2018.08.15  
திரு.T.J.அதிசயராஜ்    Up to date

News & Events

22
டிச2021
சமூர்த்தி சௌபாக்கிய இல்ல திறப்பு விழா

சமூர்த்தி சௌபாக்கிய இல்ல திறப்பு விழா

சௌபாக்கிய 4வது வாரத்தை முன்னிட்டு சேனைக்குடியிருப்பு 01B கல்முனை...

28
ஆக2017
போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு

போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு

போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியானது பிரதேச செயலாளர்...

குடியுரிமை சாசனம்

Scroll To Top